உங்கள் பகுதியில் திடீர் மரண விசாரணையாளரைத் தேடுங்கள். திடீர் மரண விசாரணை அதிகாரி சேவை தொடர்பான முன்மொழிவுகள் மற்றும் முறைப்பாடுகள்
தகைமைகள்
- இலங்கைப் பிரசையாக இருக்க வேண்டும்.
- தொடர்புடைய திடீர் மரண விசாரணை பிரிவுக்குள் நிரந்தர வதிவாளராக இருக்க வேண்டும்.
- விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளும் இறுதி திகதிக்கு 30 வயதுக்குக் குறையாதவராகவும் 55 வயதுக்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும்.
- க.பொ.த. (உ/த)பரீட்சையில் 3 சாதாரண சித்திகளுடன் சித்தியடைந்திருக்க வேண்டும்.(விஞ்ஞான துறையில் சித்தியடைந்தவர்களுக்கு முன்னுரிமையளிக்கப்படும்).
- திடீர் மரணவிசாரணை அதிகாரி பதவிக்கு விண்ணப்பிக்கின்ற முஸ்லீம் விண்ணப்பதாரர்கள் சரளமாக தமிழ் மொழியில் எழுதக்கூடியவர்களாகவும் பேசக்கூடியவர்களாகவும் இருக்க வேண்டும்.
- மிகச் சிறந்த ஒழுக்கமுடையவராகவும் உடல், உள தகுதியுடையவராகவும் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் நடைமுறை
- திடீர் மரண விசாரணை அதிகாரிகளுக்கான வெற்றிடங்களை நிரப்புவதற்கு அரசாங்க வர்த்தமானியில் வெளியிடப்பட்ட முடிவு திகதியன்று அல்லது அதற்கு முன்னர் விண்ணப்பத்தை அனுப்ப வேண்டும்.
- அரசாங்க வர்த்தமானியில் வெளியிடப்பட்ட மாதிரி படிவத்திற்கு அமைவாக அல்லது நீதி அமைச்சின் இணையதளத்தில் அல்லது நீதி அமைச்சிலிருந்து பெறப்பட்ட விண்ணப்ப படிவத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
- பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பங்களை செயலாளர், நீதி அமைச்சு, கொழும்பு 12 என்ற முகவரிக்கு பதிவுத்தபால் மூலம் அனுப்ப வேண்டும். அல்லது நீதி அமைச்சின் சமாதான நீதவான் பிரிவில் ஒப்படைக்க முடியும்.
சுற்றறிக்கைகள்
புதிய தரநிலை நடைமுறை விதிகளின் கீழ் திடீர் மரண விசாரணை அதிகாரியை இணைத்தல்.
காலக்கெடு 2023-05-21 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது, மேலும் இந்த தேதி எந்த காரணத்திற்காகவும் மீண்டும் மாற்றப்படாது..
