Accessibility Tools

moj logo

Open menu

Bureau of Rehabilitation Act

 

நோக்கு

புத்திசாதூரியமான,ஆரோக்கியமான நல்லொழுக்கமுள்ள எதிர்கால சமூகமொன்றை கட்டியெழுப்புதல்.

பணி

எதிர்கால இலங்கை சமுதாயத்தை அறிவுடன் கூடிய, ஆரோக்கியமுள்ள, பலமான, நல்லொழுக்கமுள்ள, மனிதர்களைக் கொண்ட சமுதாயமாக கட்டியெழுப்புதல்.

 

நோக்கம்

  • புனர்வாழ்வு பெறுனர்களின் பொருளாதார சமூக மற்றும் கல்வி மட்டத்திற்கு ஏற்ப உதவிகளைச் செய்தல். யுத்த மனோநிலை மற்றும் போதைப்பொருள் பாவனையிலிருந்து விலகுவதற்கான உதவிகளைச் செய்தல். உளவியல் விஞ்ஞான ரீதியான சிகிச்சைகளினூடாக நடத்தைகளை மாற்றுவதற்கு முயற்சித்தல்.
  • அவர்கள் வாழும் சூழல் மற்றும் நிலைமைகளை மாற்றுதல்; போர்க்குணம் மற்றும் போதைப் பொருட்களுக்கு அடிமையாதல் போன்றவற்றிலிருந்து இவர்களை மீட்டெடுத்தல்.
  • சமூக மயப்படுத்தப்பட்ட பின்பு தொழில் வாய்ப்புக்களை பெற்றுக் கொள்வதற்கான தொழில் தகைமைகளை பெற்றுக் கொடுத்தல்.
  • குடும்பக் கட்டமைப்பை வலுப்படுத்தல் மற்றும் அதன் முக்கியத்துவம் இருதரப்பு கொள்கைகளை புரிந்து செயற்படுதல் குடும்பத்தை கொண்டு நடாத்துவதற்கான பொருளாதார சமூக நலன்புரி செயற்பாடுகளை கட்டியெழுப்புதல்.

செயற்பாடுகள்

புனர்வாழ்வு செயற்பாட்டின் முதற்கட்டமாக 6 மதாதங்கள் உடல் உள வளர்ச்சி சம்பந்தமான செயற்பாடுகள் இடம் பெறும். (ஆன்மீக, ஆலோசனை வழிகாட்டல்கள் யோகாசனப் பயிற்சிகள் மற்றும் பல்வேறு சிகிச்சைகள்) கல்வி நிகழ்ச்சித் திட்டங்கள் (மும்மொழி, தொழிநுட்ப அறிவு, விசேட தின நிகழ்வுகளை அனுஷ்டித்தல்) கலைநிகழ்ச்சித் திட்டங்கள் (அழகியற்கலை, நடனம், சங்கீதம் மற்றும் சிற்பக்கலை) விளையாட்டு நிகழ்ச்சிகள் தலைமைத்துவம், ஆளுமை வளர்ச்சி மற்றும் சமூக மயப்படுத்தப்பட்ட பின்னர் தொழில்வாய்ப்பு ஒன்றினை பெற்றுக் கொள்வதற்கு தேவையான வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்குத் தேவையான சுய தொழில்வாய்ப்பு பயிற்சி பட்டறைகள் அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களினால் ஏற்பாடு செய்யப்பட்டு நடாத்தப்படும்.

புனர்வாழ்வு அளிக்கும் நிகழ்ச்சித் திட்டத்தின்; இரண்டாம் கட்டமாக இறுதி ஆறாவது மாதத்தில் தொழிற்பயிற்சி பாடநெறிகள் தேசிய பயிலுனர் கைத்தொழிற் பயிற்சி அதிகார சபை (NAITA) இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபை (VTA) புனர்வாழ்வு ஆணையாளர் நாயகப் பணியகத்தின் ஆலோசகர்களினால் நடாத்தப்படும். பாட நெறியின் இறுதியில் சித்தியடைந்தவர்களுக்கு NVQ iii மட்ட சானறிதழ் மூன்றாம் நிலைக் கல்வி தொழிற்கல்வி ஆணைக்குழு சபையினால் (TEVC) வழங்கப்படும்.

புனர்வாழ்வளிக்கப்பட்ட பின்னர் சமூக மயப்படுத்தப்பட்ட புனர்வாழ்வு பெறுனர்களை தொடராய்வு செய்து நடவடிக்கைகை மேற்கொள்ளல்.

ஒருவருடகாலத்தின் பின் இப்பணியகத்தில் புணர்வாழ்வு பெற்ற பின்னர் சமூகமயப்படுத்துவதற்கு பின்னர் புனர்வாழ்வு அளிக்கப்பட்டவர்களின் வாழ்வை மேம்படுத்தும் நோக்குடன் புனர்வாழ்வளிக்கப்பட்டவர்களின் பொருளாதார சமூக நலன்புரி நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்காக ஒருங்கிணைப்பு காரியாலயங்கள்; (SEWCORB) பின்வருமாறு உள்ளது. இந்த அலுவலகங்களினூடாக சமூகமயப்படுத்தப்பட்டு புனர்வாழ்வு அளிக்கப்பட்டவர்கள் கண்காணிக்கப்பட்டு அவர்களுடைய தேவைகள் நிறைவு செய்து கொடுக்கப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

கட்டுப்பாட்டு சபை அதிகாரிகள்இ சமூக சேவைகள் திணைக்களத்தின் ஆலோசகர்கள்இ பொலிஸ் மது ஒழிப்பு பிரிவின் அதிகாரிகள்) பங்குபற்றலோடு கிராம சேவகர் மற்றும் பொது மக்களுக்காக சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் செயற்படுத்தப்படுகின்றன.

நாட்டின் எதிர்கால சந்ததிகளான எதிர்காலத்தைத் தீர்மானிக்கின்ற பாடசாலை மாணவர்களை போதைப் பொருளுக்கு அடிமையானவர்களாக ஆக்குவதே போதைப் பொருள் விற்பனையாளர்களின் குறிக்கோளாக இருக்கின்றது. இதற்கு காரணம் தங்களுடைய போதைப்பொருள் வியாபாரத்தை நீண்ட காலம் பாடசாலை மாணவர்களிடம் மேற்கொள்ள முடியும் என்பதாகும். அதற்கமைவாக பாடசாலைகளில் மாணவர்களுக்கு விழிப்பூட்டல் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டது.

தொடர்புகளுக்கு

 புனர்வாழ்வுப் பணியகம்,
இல: 462/2,கடுவெல வீதி,
கனஹேன,
பத்தரமுல்ல.
 +94 112 883 891/ +94 112 577 457
 +94 112 883 737/ +94 112 883 899
 இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

Visit official web site

Facebook

Youtube

FaLang translation system by Faboba