Accessibility Tools

moj logo

Open menu

நோக்கு

நாட்டில் சிறப்பாக முகாமை செய்யப்படுகின்ற நியதிச்சட்ட சபையாக மீயுயர் நீதிமன்றக் கட்டிடத் தொகுதி முகாமைச்சபையை அபிவிருத்தி செய்வதாகும்.

செயற்பணிகள்

நீதி மற்றும் சட்ட தொழில்துறையில் ஈடுபட்டுள்ள யாவருக்கும் தற்போதிருக்கும் கட்டிடங்கள் மற்றும் அடிப்படை வசதிகளைப் பயன்படுத்துகின்றமையால் அவற்றைப் பராமரித்து மேலும் விருத்தி செய்து அவர்களுக்கேற்ற சூழலை வழங்கலாம் என்பதோடு அது அவர்கள் சேவை வழங்கக்கூடிய வழக்குத் தொடுனர்கள், மற்றும் அத்துடன் தொடர்புடயவர்களுக்கு செயற்திறனானதும், நியாயமானதும் நீதியானதுமான சேவையை வழங்கும் நோக்கத்தோடு அவர்களின் செயற்பாடுகளைப் புரிவதற்கும் உதவியாக இருக்கும் என்பதோடு அதன் மூலம் மேற்குறிப்பிட்ட நோக்கத்தை அடைந்து கொள்ளல்

 

1987ம் ஆண்டின் 50ம் இலக்க மீயுயர் நீதிமன்ற கட்டிடத்தொகுதி முகாமைச்சபை சட்டத்தின் பிரகாரம் மீயுயர் நீதிமன்ற கட்டிடத்தொகுதியையும் அதன் கட்டிடங்ளையும் பரிபாலித்து கட்டுக்கோப்போடு நிர்வகித்து பராமரித்து மேலும் வசதி வாய்ப்புக்களை மேம்படுத்தவேண்டிய தேவை ஏற்படுமிடத்து உரிய மாற்றங்களையும், சீர் திருத்தங்களையும் மேலதிக மாற்றங்களையும் செய்யும் நோக்கில் மீயுயர் நீதிமன்ற கட்டிடத்தொகுதி முகாமைச்சபை ஏற்படுத்தப்பட்டது. நிர்வாக சபை பின்வரும் அங்கத்தவர்களை உள்ளடக்கியுள்ளது:-

  • பிரதம நீதியரசர்
    • பிரதம நீதியரசரினால் நியமனஞ் செய்யப்படும் உயர் நீதிமன்ற நீதியரசரொருவர்
    • மேன்முறையீட்டு நீதிமன்ற தலைமை நீதியரசர்
    • மேன்முறையீட்டு நீதிமன்ற தலைமை நீதியரசரால் நியமனஞ் செய்யப்படும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசரொருவர்
    • நீதிஅமைச்சின் செயலாளர்
    • உள்ளூராட்சி, வீடமைப்பு, கட்டிட நிர்மாண அமைச்சின் செயலாளர்
    • இலங்கை சட்டத்தரணிகள் சங்கத் தலைவர்
    • கொழும்பு மாநகரசபை ஆணையளர்
    • நிதி அமைச்சரின் பிரதிநிதி
    • அதிமேதகு இலங்கை சனாதிபதியால் நியமிக்கப்படும் இரு அங்கத்தவர்கள்

Air Vice Marshal Eng. L. M. S. K. Leelaratne (Retd). 
Chief Executive Officer (Marshal)
 +94 112 437 500
 +94 112 437 530
 இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

FaLang translation system by Faboba