Accessibility Tools

moj logo

Open menu

1988 ஆம் ஆண்டின் 72 ஆம் இலக்க மத்தியஸ்த  சபைகள் சட்டத்தின் மூலம் மத்தியஸ்த  சபைகள் ஆணைக்குழு தாபிக்கப்பட்டது. அதன் கீழ் இலங்கையின் சகல பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் மத்தியஸ்த  சபைகளைத் தாபிக்க ஆரம்பிக்கப்பட்டது.  இது நீதிமன்றச் செயற்பாட்டை எளிதாக்கும் நோக்கத்துடன்  பிணக்குளைத் தீர்க்கும் மாற்று வழிமுறையொன்றாக நீதிமன்றங்களுக்கு சமர்ப்பிக்கப்படுகின்ற பிணக்குகளில் சிறு பிணக்குளைத் தீர்ப்பதற்காகத் தயார் செய்யப்பட்ட மிகப்பெறுமதியான செயற்பாடொன்றாக அறிமுகம் செய்யலாம். இதுவரை இலங்கை முழுவதிலும் 329 பிரதேச செயலாளர் பிரிவுகளில் தாபிக்கப்பட்டுள்ள மத்தியஸ்தர்கள் குழாத்துக்களில் சுமார் 8266 மத்தியஸ்தர்கள் சுயேச்சையுடன் பணி புரிகின்றனர்.

மத்தியஸ்த சபைகள் ஆணைக்குழு 05 உறுப்பினர்களைக் கொண்டுள்ளதுடன் அவர்கள் அதிமேதகு சனாதிபதியால் அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் நியமிக்கப்படுகின்றனர். மத்தியஸ்தர்களை நியமித்தல், மாற்றஞ் செய்தல்  மற்றும் அவர்களின் ஒழுக்காற்று நடவடிக்கைகள் போன்றவற்றிற்கான அதிகாரம் மத்தியஸ்த  சபைகள் ஆணைக்குழுவிடம் உள்ளது.

மத்தியஸ்த செயற்பாட்டின் மூலம் இரு திறத்தவர்கள் அல்லது அதற்கு மேற்பட்டோர்களுக்கிடையே ஏற்படுகின்ற பிணக்குளைத் தீர்த்துக் கொள்வதற்காக மூன்றாம் திறத்தவராக மத்தியஸ்தர்கள் செயற்படுகின்றனர்.

ஒவ்வொரு ஆண்டிலும் மத்தியஸ்த சபைகளிடம் ஆற்றுப்படுத்தப்படுகின்ற பிணக்குகளின் அதிகரிப்பானது சமுதாயம் தமது பிணக்குகளைத் தீர்த்துக்கொள்வதற்கு இலகுவான மற்றும் குறைந்த செலவுப் பொறிமுறையொன்றாக மத்தியஸ்தத்தை ஏற்றுக்கொண்டுள்ளமைக்கு சான்றாகவுள்ளது. மத்தியஸ்த சபைகளுக்கு ஆற்றுப்படுத்தப்படும்  பிணக்குகளின் எண்ணிக்கை நூறாயிரத்தை விட அதிகதித்துள்ளமை இதனை நிரூபிக்கிறது.

more detail click website: http://mediation.gov.lk/

மத்தியஸ்தர்களாக நியமிப்பதற்குப்பெயர் குறித்த நியமனங்களைக் கோரும் அறிவித்தல்

வர்த்தமானப் பத்தரிகை திகதி வர்த்தமானப் பத்தரிகை
வர்த்தமானப் பத்தரிகை திகதி 19.04.2019 வர்த்தமானப் பத்தரிகை [ PDF - 214.2 KB ]
வர்த்தமானப் பத்தரிகை திகதி 23.01.2017 வர்த்தமானப் பத்தரிகை [ PDF - 338.62 KB ]
வர்த்தமானப் பத்தரிகை திகதி 07.06.2018 வர்த்தமானப் பத்தரிகை [ PDF - 112.36 KB ]
வர்த்தமானப் பத்தரிகை திகதி 04.04.2018 வர்த்தமானப் பத்தரிகை [ PDF - 77.31 KB ]
வர்த்தமானப் பத்தரிகை திகதி 04.07.2018 வர்த்தமானப் பத்தரிகை [ PDF - 214 KB ] 
வர்த்தமானப் பத்தரிகை திகதி 27.02.2019 வர்த்தமானப் பத்தரிகை [ PDF - 137.38 KB ]
வர்த்தமானப் பத்தரிகை திகதி 19.03.2018 வர்த்தமானப் பத்தரிகை [ PDF - 61.09 KB ]
வர்த்தமானப் பத்தரிகை திகதி 26.02.2018 வர்த்தமானப் பத்தரிகை [ PDF - 538.5 KB ]
வர்த்தமானப் பத்தரிகை திகதி 29.09.2017 வர்த்தமானப் பத்தரிகை [ PDF - 857.37 KB ]
FaLang translation system by Faboba