Accessibility Tools

moj logo

Open menu

அறிமுகம்

1950 இன் 43 ஆம் இலக்க கைத்தொழில் பிணக்குகள் சட்டத்தின் 31 (ஆ) பிரிவுக்கு அமைய கிடைக்கின்ற முறைப்பாடுகள் தொடர்பான விண்ணப்பங்களை விசாரணை செய்து தீர்;த்துவைப்பதற்கு 39 தொழில் நியாயசபைகள் இயங்கிவருவதுடன்,மேற்படி நியாயசபைகளுக்கு அலுவலர்களை ஆட்சேர்ப்புச் செய்தல், அலுவலர்களின் பதவி உயர்வுகள், இடமாற்றங்கள், ஓய்வுறுத்தல் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளைப் பெற்றுக் கொடுப்பது தொழில் நியாயசபைகள் செயலகத்தின் முக்கிய பணிகளாகும்.
தொழில் நியாயசபைகள்,கைத்தொழில் பிணக்குகளை தீர்த்துவைப்பதற்காக, கைத்தொழில் பிணக்குகள் சட்டத்தின் மூலம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

தொழில் நியாயசபையினால் நிவாரணம் வழங்கப்படக்கூடிய தரப்பினர்கள் யாவர்?

  • தனியார்துறையைச் சேர்ந்த சகல ஊழியர்கள்.
  • வீட்டுப் பணியாளர்கள்.
  • பகுதியளவிலான அரச நிறுவனங்களின் ஊழியர்கள் (அரச கூட்டுத்தாபனம், நியாயாதிக்க சபைகள், அரசக் கம்பனிகள், பணியகங்கள்)

அரச ஊழியர்கள், கைத்தொழில் பிணக்குச் சட்டத்திலிருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார்கள் என்பதனால் அவர்களை சேவைக்கு அமர்த்துவது தொடர்பான பிணக்குகளுக்கு அரசியலமைப்பின் பிரகாரம் அடிப்படை உரிமை வழக்குகள் (உயர் நீதிமன்றம்) மற்றும் ரீட் உத்தரவுகள் பற்றிய வழக்குகள் (மேன்முறையீட்டு நீதிமன்றம்) மூலம் நிவாரணம் பெற்றுக் கொள்வதற்கு தகைமை பெறுவதுடன், பகுதியளவிலான அரச ஊழியர்களும், அரச ஊழியர்களுக்கு சமமாக மேலுள்ள உரிமைகளுக்கு உரிமைகோர தகைமை பெறுகின்றார்கள். அதற்கமைய பகுதியளவிலான அரச ஊழியர்கள் அரசியலமைப்பின் கீழும், கைத்தொழில் பிணக்குகள் சட்டத்தின் கீழும் நிவாரணம் பெற்றுக் கொள்ள தகைமை பெறுகின்றார்கள்.

தொழில் நியாயசபையொன்றிலிருந்து எவ்வாறான நிவாரணங்களுக்கு கோரிக்கை விடுக்க முடியும்?

கைத்தொழில் பிணக்குகள் சட்டத்தின் 33 ஆம் பிரிவுக்கு அமைய பின்வரும் நிவாரணங்களுக்கு உரிமை கோரி வழக்குத் தாக்கல் செய்யும் ஆற்றல் உள்ளது என்பது தெளிவாகின்றது.

  • சேவையை நிறைவு செய்வது தொடர்பான விடயத்தில் நிலுவைச் சம்பளம்
  • பிந்திய சம்பளத்துடன் அல்லது இன்றி சேவை.
  • நட்டஈடு.
  • ஓய்வூதியம், பணிக்கொடை மற்றும் ஓய்வூதியப் பயன்கள்
  • மீள்சேவைக்கு அமர்த்துவம் நிவாரணத்துக்கான நட்டஈடு.

கைத்தொழில் பிணக்குகள் சடட்த்தின் (31 ஆ பிரிவுக்கு அமைய)

  • தொழில் வழங்குனரினால் வெளிப்படுத்தும் கூற்றின் மூலம் அல்லது அனுமானமாக சேவை முடிவுறுத்தப்படும் போது.
  • எந்தவொரு தன்மையிலாயினும் சேவை முடிவுறுத்தப்படும் போது சேவை நிறைவடையும் சந்தர்ப்பத்திற்கு முன்னதான 12 மாத காலப்பகுதிக்குள் ஊழியர்கள் 15 பேருக்குக் குறைவான வியாபார இடங்களில் சேவையாற்றும் ஊழியர்களின் பணிக்கொடை.
  • பணிக்கொடை சட்டத்தின் 13 ஆம் பிரிவுக்கு அமைய பணிக்கொடையை இழக்கச் செய்துள்ளமை தொடர்பான நியாயமானதன்மை.
  • சேவைக்கு அமர்த்தும் நிபந்தனைகள் அல்லது சேவை நிலைமைகள் பற்றி அமைச்சரினால் ஆக்கப்படுகின்ற ஒழுங்குவிதிகளை மீறல் தொடர்பாக. (இது தொடர்பாக இதுவரை ஒழுங்குவிதிகள் தயார் செய்யப்படவில்லை என்பதனால் இந்த நீதிமன்ற தத்துவம் அமுல்படுத்தப்படாத நிலை காணப்படுகின்றது.)

தொழில் நியாய சபையொன்றில் எக்காலப்பகுதிக்குள் வழக்குத் தாக்கல் செய்ய வேண்டும்?

  • சேவை நிறைவடைந்துள்ளமை பற்றி அறியக்கிடைத்த நாள் முதல் 06 மாத காலப்பகுதிக்குள்

நிவாரணம் பெற்றுக் கொள்வதற்காக தொழில் நியாயசபையொன்றில் எவ்வாறான ஆட்கள் விண்ணப்பம் சமர்ப்பிக்க முடியும்?

  • ஒரு விண்ணப்பப்படிவம் மூலம் வழக்குத் தாக்கல் செய்வதை குறித்த ஊழியரே மேற்கொள்ளல்.
  • குறித்த ஊழியர் தொழில் சங்க உறுப்பினராக உள்ள பட்சத்தில் மேற்படி ஊழியர் சார்பாக குறித்த தொழில் சங்கத்தின் தவிசாளர் அல்லது செயலாளர் வழக்குத் தாக்கல் செய்தல்.
  • ஒரு ஊழியர் அல்லது தொழில் சங்கம் சார்பாக சட்டத்தரணி ஒருவர் வழக்குத் தாக்கல் செய்தல்.

நோக்கு

அரசு சாரா ஊழியர்களின் வேலைப் பாதுகாப்புக்கான உத்தரவாதம்.

செயற்பணிகள்

விரைவானதும், நீதியானதும், திறமையானநிர்வாகத்தின் மூலமும்ஆற்றல் மற்றும்பயிற்சி பெற்ற ஊழியர்களின் உதவியுடனும் அரசு சாரா ஊழியர்களின் வேலைப் பாதுகாப்புக்குஉத்தரவாதம் அளித்தல்.

பணி

தொழில் நியாய சபைகளைப் பேணுவதற்குத் தேவையான மனிதவளங்கள், கூட்டு வளங்கள் மற்றும் நிதிவளங்கள் ஆகியவற்றை வழங்குதலும் முகாமைசெய்தலும் தொழில் நியாய சபைகளின் தலைமை அலுவலகத்தின் பிரதான பணிகளாகும்.

மேலதிக தகவல்கள்

செயலாளர்,
தொழில் நியாயசபைகள் அலுவலகம்,
இலக்கம் 19,
ஸ்ரீ சங்கராஜ மாவத்தை,
கொழும்பு 10.
+94 112 478 339
+94 112 320 785
 செயலாளர் - இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்./ அலுவலகம்- இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

FaLang translation system by Faboba